கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…

07/11/2009 at 5:47 பிப (கவிதை, பாடல்கள்) (, , )

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே…

நினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே…

சாரல் மழை துழியில், உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்…
நாணம் நான் அறிந்தேன், கொஞ்சேம் பணி பூவாய் நீ குறுக…
எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி …
நிஜம் புரியாத  நிலை  அறிந்தேன் , எது வரை சொல்லடி..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே…

தேடல் வரும் பொழுது, என் உணர்வுகளும் கலங்குதடி..
கானலாய் கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்…
இணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே …
தவித்திடும் போது ஆறுதலை உன்மடி  சாய்கிறேன் ..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே…

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…

இந்த பாடல் திலிப் வர்மனின் “கனவெல்லாம்” என்ற இசைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. திரை பாடல்கள் நிறைந்த தமிழ் இசை உலகில், கவிதை மனம் கொண்ட இந்த வகை பாடல்கள் அனைத்து இளம் உள்ளங்களையும் கவர்ந்தது என்றே கூறவேண்டும்.

Advertisements

நிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்