ராவணனில் பாரதியார் கவிதை

04/07/2010 at 4:13 பிப (கவிதை, கவிதைகள், Uncategorized) (, , , , )

ஐயம் உண்டு

ராகம்-கமாஸ்                                                                                       (தாளம்-ஆதி)

பல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு.                                     (ஜய)

அனுபல்லவி

பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை                                 (ஜய)

சரணங்கள்

புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு                                  (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு                (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு.                                    (ஜய)

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-II66.asp

Advertisements

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

பெண் – யாரோ எழுதிய கவிதை

29/06/2010 at 10:59 முப (கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (, , )

ஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,

காற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,

கெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,

இறுகப் பின்னிய ரெட்டை  ஜடை,

புரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,

கண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,

கன்னத்து ரெட்டக்குழிகளின்  வெட்கம்,

மார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,

பயத்தில் பிரசவிக்கும் உதட்டு  வியர்வை,

தேக  வாசனையுடன்  சின்ன கைக்குட்டை,

சோகத் துணையாய்  ஈரத் தலையணை,

வெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,

அழுகையில் அரவணைக்கும் ஆண்மை,

உயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,

சுரந்து போகும் தாய்மை துளி,

அம்மா என்ற அழைப்பின் வருடல்,

அத்தனையும் அனுபவிக்க

அடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்

கள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.

நிரந்தர பந்தம் 4 பின்னூட்டங்கள்

இல்லையென்று கவலையில்லை

17/06/2010 at 5:34 பிப (கவிதை, காதல்) (, , , )

நீ இல்லாத
எதிர்காலத்தை எண்ணி
எனக்கு கவலையில்லை
உன்னைவிட
என்னையது
வருத்தப்போவதில்லை
பசுமையான நினைவுகள்
என் நெஞ்சோரம்
சாமரம் வீசும்
கண்மூடி
உறங்கும் போதும்
கனவலையில்
காட்சியாக விரியும்
உன்னைவிடவும்
உன் நினைவுகள்
அழகானவை
அமைதியானவை
அவை என்னை
அழவைப்பதில்லை

-மீரா.

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

எழுந்துவிட்ட அதிகாலை

19/12/2009 at 11:29 பிப (காதல்) (, , )

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

அலரும் அழைபேசி ,

காதலியின் நினைவுகள்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

சற்று கணத்துடன் மணிபர்ஸ் ,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

குமரேசன்
திரவியம் தேடி சென்னை வந்தவன்

நிரந்தர பந்தம் 1 பின்னூட்டம்