எழுந்துவிட்ட அதிகாலை

19/12/2009 at 11:29 பிப (காதல்) (, , )

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

அலரும் அழைபேசி ,

காதலியின் நினைவுகள்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

சற்று கணத்துடன் மணிபர்ஸ் ,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

குமரேசன்
திரவியம் தேடி சென்னை வந்தவன்

நிரந்தர பந்தம் 1 பின்னூட்டம்