பாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்

24/07/2010 at 7:35 முப (கவிதை, கவிதைகள், காதல், பெண், Uncategorized)

பாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்,
ஒரு வார்த்தை ஓராயிரம் வலி – வலி எனினும்
உன் நினைவுகள் என்பதால் பதியம் போடுகிறேன்
உள்ளே அழுகிறேன், உனக்காய் சிரிக்கிறேன்
முகம் மாற்றி நடிக்கிறேன் – உனக்காய்
உன்னிடமிருந்து விலகுகிறேன் – என் விழி நீரோடு,
எனினும் எப்போதும் என் பார்வை உன் பாதம்  தாங்கும்.

Advertisements

நிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்

காதலில் சொதப்புவது எப்படி???????????

02/07/2010 at 2:30 முப (கவிதை, கவிதைகள், காதல், சிறுகதை, நகைச்சுவை, பெண், Uncategorized) (, , , , , , , )

நீங்க எப்படி ?????

நிரந்தர பந்தம் 3 பின்னூட்டங்கள்

பெண் – யாரோ எழுதிய கவிதை

29/06/2010 at 10:59 முப (கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (, , )

ஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,

காற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,

கெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,

இறுகப் பின்னிய ரெட்டை  ஜடை,

புரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,

கண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,

கன்னத்து ரெட்டக்குழிகளின்  வெட்கம்,

மார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,

பயத்தில் பிரசவிக்கும் உதட்டு  வியர்வை,

தேக  வாசனையுடன்  சின்ன கைக்குட்டை,

சோகத் துணையாய்  ஈரத் தலையணை,

வெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,

அழுகையில் அரவணைக்கும் ஆண்மை,

உயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,

சுரந்து போகும் தாய்மை துளி,

அம்மா என்ற அழைப்பின் வருடல்,

அத்தனையும் அனுபவிக்க

அடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்

கள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.

நிரந்தர பந்தம் 4 பின்னூட்டங்கள்

விளங்காத விடியல்

06/11/2009 at 9:14 பிப (கவிதை, கவிதைகள், காதல், பெண்) (, , , , , )

ஏங்கும் இதயம் பற்றி
எழுத்தாணிக்கு கவலையில்லை!!!
இடைமறிக்கும் உன் நினைவுகளையே
எழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று
வெறும் தவிப்புகளையே
பரிசளிக்கிறாய்…..

ஈரம் கொண்ட
இளஞ்சிவப்பு இதழ்கள்
இரக்கமில்லாத உன் கைகள்
இட்ட வேலியில்
உன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….

இரவுகளை இழக்க மனமின்றி
இனியவன் துணையின்றி
இம்மியளவும் வாழ்வில் சுவையின்றி
விரகமென்று நிற்கும் போது

விழித்திரை வேர்க்கும் முன்னே
விரதத்தை முடிக்கிறாய்!!!
தூங்காத மனமோ தூயவன்
உனையெண்ணி துடிக்க…

அர்த்த ராத்திரி அனைத்தும்
அமைதி காக்கிறது..
நீ ஆலிங்கனம்
செய்யவேண்டி…

நினைவுகளின் ஈரம்
சுவாசத்தில் காய மறுக்க
அணைக்கும் ஆவேசத்தில்
அர்த்த ஜாமமோ அடுத்த
பொழுதை தர வெறுக்கிறது…

மனதில் காதலோடு
மரத்து போன உடலோடு
வெறுத்து போகுதடா காதல்
கறுத்த இரவும் விடியல் கண்டு….

வெளுத்து விடிகிறதடா?
வேதனையில் துடித்து
விழிக்கிறதடா!!!!!!

தமிழரசி

நிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்