பெண் – யாரோ எழுதிய கவிதை

29/06/2010 at 10:59 முப (கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (, , )

ஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,

காற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,

கெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,

இறுகப் பின்னிய ரெட்டை  ஜடை,

புரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,

கண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,

கன்னத்து ரெட்டக்குழிகளின்  வெட்கம்,

மார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,

பயத்தில் பிரசவிக்கும் உதட்டு  வியர்வை,

தேக  வாசனையுடன்  சின்ன கைக்குட்டை,

சோகத் துணையாய்  ஈரத் தலையணை,

வெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,

அழுகையில் அரவணைக்கும் ஆண்மை,

உயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,

சுரந்து போகும் தாய்மை துளி,

அம்மா என்ற அழைப்பின் வருடல்,

அத்தனையும் அனுபவிக்க

அடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்

கள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.

4 பின்னூட்டங்கள்

  1. ம‌கிடேஸ்வ‌ர‌ன் செ said,

    என்றோ ஒரு கால‌த்தில், எங்கோ ஓரிட‌த்தில் பெண்ணென்று பிற‌ந்து கேடுகெட்ட‌ மூட‌ர்க‌ளின் அறியாமையால் ம‌டிந்துபோன‌ குழ‌ந்தைக‌ளின் உண‌ர்வுக‌ளை இங்கு யாரோ எழுதிய‌ க‌விதையாய் பெண்ணென்ற‌ த‌லைப்பில் உண‌ர்ந்த‌ அனுப‌வ‌ம். பாவ‌ம், வாழ்ந்திருக்க‌வேண்டிய‌ உயிர்க‌ள்.

  2. Kathir said,

    இப்ப எல்லாம் குறைசிடுசுன்னு நினைக்கிறேன்

  3. sami said,

  4. sami said,

    very nice poem

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: